09 March 2023

கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்

கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்

            கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா

            கண்ணோக்கி பார்த்திடுமே - 2

                        நீர் இரக்கமும் உருக்கமும்

                        நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே

                        என் இயேசையா கிருபையும் உள்ளவரே

 

1.         தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே

            என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா

            என்னையும் மீட்டுக்கொள்ளும்

            அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே

            எங்களையும் ரட்சித்து கொள்ளும்

            என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்

 

2.         மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்

            என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா

            என் ஜெபமும் கேட்டருளும்

            இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்

            எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா

            எங்கள் ஜெபம் கேட்டருளும்

 

3.         யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்

            என் தேசம் கேட்கணுமே என் இயேசையா

            என் ஜனம் கேட்கணுமே

            நினிவேக்கு கிடைத்த கிருபை போல

            எங்களுக்கும் கிருபை தாருமே

            என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...