16 March 2023

வாழ்ந்து பார் ஜெயிக்கலாம்

வாழ்ந்து பார் ஜெயிக்கலாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாழ்ந்து பார் ஜெயிக்கலாம்

                        விண்ணைத் தொட்டு பார்க்கலாம்

                        இயேசுவோடு பயணம் செய்யலாம்

                        எழுந்து வா வெல்லலாம்

                        சிறகடித்து பறக்கலாம்

                        பாவத்திற்கு முடிவு கட்டலாம்

 

1.         விட்டு வந்த பாவம் அதை தீண்டி பார்ப்பதில்லை

            கற்றுக் கொண்ட வேதம் அதை விட்டு விட்டுவிடுவதில்லை

            இதயம் பெற்ற வாழ்க்கை அதை விரையம் செய்வதில்லை

            மறையும் கெட்ட வாழ்க்கை அவர் தூய இரத்தத்தாலே

            வாழ்க்கை ஒருமுறை பரிசுத்தம் வரைமுறை

            வாழ்ந்து காட்டலாம் நம் தேவ சாயலை

            தோல்வி இல்லை வெற்றி என்றும்

            ஜெயிக்க போகும் புதிய பயணம்

            புதுமை காணும் எனது பயணமே

 

2.         தூய்மையான பாதை ஒன்று எனக்கு கிடைத்தது

            தூயர் இயேசு அன்று இது எனக்கு கொடுத்தது

            சிலுவை சுமந்த பாதை அது பாடு நிறைந்தது

            சிலுவை சுமந்த போது பாவப் பாரம் தொலைந்தது

            ஒன்று செய்கிறேன் அதை இன்றே செய்கிறேன்

            உலகை வெறுக்கிறேன் என்னை பணிந்து தருகிறேன்

            என்னை அழைத்த தேவன் எனக்கு

            கொடுக்கப் போகும் வெற்றிக் கிரீடம்

            பெற்றுக்கொள்ள பயணம் செய்கிறேன்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...