21 March 2023

ஆசீர்வாத மழையே என்மேல் பெய்யுமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆசீர்வாத மழையே என்மேல் பெய்யுமே

                        ஏற்ற காலத்தில் நன்மை பெறுவேனே

 

1.         கையின் பிரயாசத்தின் பலனை காணுவேன்

            ஆயிரம் மடங்காக பலன் பெற்று வாழுவேன்

 

2.         வலப்புறம் இடப்புறம் இடங்கொண்டு பெருகியே

            தடைகள் இன்றியே செழித்து வாழுவேன்

 

3.         வியாதிகள் இன்றியே சுகமாய் வாழுவேன்

            நீடித்த நாட்களால் திருப்தியாய் வாழுவேன்

 

4.         உன்னதர் நிழலிலே இன்பமாய் தங்குவேன்

            தீமைகள் அணுகாமல் பயமின்றி வாழுவேன்

 

5.         நுகங்களை முறித்துமே விடுதலை அடைவேனே

            ஞானத்தை பெற்றுமே மேன்மையாய் வாழுவேன்

 

6.         கர்த்தர் என் மேய்ப்பரே மேய்ச்சலை காணுவேன்

            அவருடன் நடந்துமே வெற்றியாய் வாழுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...