இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும்

இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

பல்லவி

 

          இயேசுவைப் போல் அழகுள்ளோர் யாரையும் இப்பூவினில்

            இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

 

அனுபல்லவி

 

                        பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்

                        நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே

                        மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன்

 

1.         சம்பூரண அழகுள்ளோர் என்னை மீட்டுக் கொண்டீரே

            சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன்

 

2.         எருசலேம் குமாரிகள் எத்தனை வளைந்தோராய்

            உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார்

 

3.         லோக சுக மேன்மையெல்லாம் எந்தனை கவர்ச்சித்தால்

            பாவ சோதனைகள் எல்லாம் என்னை சோதித்தால்

 

4.         நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் ஜடமோகமே

            என் மேல் வந்து வேகமாக மோதியடித்தால்

 

5.         தினந்தோறும் உம்மில் உள்ள அன்பு என்னில் பொங்குதே

            நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு