16 March 2023

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் மனம்

மகிழ்ச்சியோடு துதிக்கிறோம் மனம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மகிழ்ச்சியோடு துதிக்கிறோம்

                        மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்

                        மன்னவனே இயேசு ராஜா - எங்கள்

                        மனதில் பூத்து மணம் வீசும் ரோஜா

                        இயேசு ராஜா சாரோன் ரோஜா - 2

 

1.         நாற்றமாக இருந்த என்னை வாசமாக மாற்றினீரே

            பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாய் மாற்றினீரே - 2

            நல்லவரே வல்லவரே - (2)

            எங்களை வாழ வைக்கும் அன்பு தெய்வம் நீரே - (2) - மகிழ்ச்சியோடு

 

2.         நெருக்கத்திலே இருந்த என்னை விசாலத்தில் வைத்தீரே

            சேற்றிலிருந்து தூக்கி எடுத்து கன்மலைமேல் நிறுத்தினீரே - 2

            அற்புதரே அதிசயமே - (2)  

            ஆனந்தமே பரம ஆனந்தமே

            இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே - மகிழ்ச்சியோடு

 

3.         நான் அடுப்புக்கரி போலிருந்தேன் பொன் சிறகாய் மாற்றினீரே

            உம் இரத்தத்தாலே கழுவி என்னை சுத்தமாக ஆக்கினீரே - 2

            உன்னதரே உயர்ந்தவரே - (2)

            இருள் நீக்கும் ஒளி விளக்கே

            உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளி விளக்கே - மகிழ்ச்சியோடு

 

4.         தாயைப்போல என்னை அவர் சோர்த்தணைத்துக் கொண்டாரே

            நல்ல தந்தை போல என்னை அவர் தோளில் தூக்கிச் சுமந்தாரே - 2

            அப்பாவல்லோ எந்தன் அப்பாவல்லோ - (2)

            பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ

            இயேசுவுக்கு பிள்ளையல்லோ செல்லப் பிள்ளையல்லோ - மகிழ்ச்சியோடு

 

 

- Pastor. Dr. Jeyaseelan Sebastian

 

 

YouTube Link
YouTube Link
பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...