16 March 2023

அப்பா பிதாவே அன்பான தேவா

நிஜீ.கீதங்கள்:628

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அப்பா பிதாவே அன்பான தேவா

                        அருமை இரட்சகரே ஆவியானவரே

 

1.         எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்

            என் நேசர் தேடி வந்தீர்

            நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து

            நிழலாய் மாறி விட்டீர்

            நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

2.         தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்

            தயவாய் நினைவு கூர்ந்தீர்

            கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து

            கரம் பற்றி நடத்துகிறீர்

            நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

3.         உளையான சேற்றில் வாழ்ந்த என்னை

            தூக்கி எடுத்தீரே

            கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி

            கழுவி அணைத்தீரே

            நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

4.         இரவும் பகலும் ஐயா கூட இருந்து

            எந்நாளும் காப்பவரே

            மறவாத தெய்வம் மாறாத நேசர்

            மகிமைக்குப் பாத்திரரே

            நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

5.         ஒன்றை நான் கேட்பேன்

            அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன்

            உயிரோடு வாழும் நாட்களெல்லாம்

            உம் பணி செய்திடுவேன் - நன்றி

            நன்றி உமக்கு நன்றி (அப்பா)

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...