உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம்

உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

            உம்மை நினைக்கும் போதெல்லாம்

            நெஞ்சம் மகிழுதையா

            நன்றி பெருகுதையா.

 

                        நன்றி நன்றி ராஜா

                        நன்றி இயேசு ராஜா

 

1.         தள்ளப்பட்ட கல் நான்

            எடுத்து நிறுத்தினீரே

            உண்மை உள்ளவன் என்று கருதி

            ஊழியம் தந்தீரையா

 

2.         பாலை நிலத்தில் கிடந்தேன்

            தேடி கண்டு பிடித்தீர்...

            கண்ணின் மணிபோல காத்து வந்தீர்

            கழுகு போல் சுமக்கின்றீர்

 

3.         இரவும் பகலும் கூட

            இருந்து நடத்துகின்றீர்

            கலங்கும் நேரமெல்லாம் கரம் நீட்டி - என்

            கண்ணீர் துடைக்கின்றீர்

 

4.         பேரன்பினாலே என்னை

            இழுத்துக் கொண்டீர்

            பிரிந்திடாமலே அணைத்துக் கொண்டீர் - உம்

            பிள்ளையாய் தெரிந்து கொண்டீர்

 

5.         உந்தன் துதியைச் சொல்ல

            என்னை தெரிந்து கொண்டீர்

            உதடுகளைத் தினம் திறந்தருளும்

            புது ராகம் தந்தருளும்

 

6.         சிநேகம் பெற்றேன் ஐயா

            கனம் பெற்றேன் ஐயா

            உந்தன் பார்வைக்கு அருமையானேன்

            உம் ஸ்தானாதிபதியானேன்

 

7.         உலக மகிமையெல்லாம்

            உமக்கு ஈடாகுமோ

            வானம் பூமியெல்லாம் ஒழிந்து போகும்

            உம் வார்த்தையோ ஒழியாதையா


            Ummai nenaikkum poathellaam

            Nenjam makizhuthaiya

            Nandri perukuthaiya.

 

                        Nandri nandri raja

                        Nandri Yesu raja

 

1.         Thallappatta kal naan

            Eduththu neruththineerae

            Unmai ullavan enru karuthi

            Uuzhiyam thantheeraiya

 

2.         Palai nelaththil kidanhthaen

            Thaeti kandu pitiththeer

            Kannin manipoala kaththu vantheer

            Kazhuku poal sumakkintreer

 

3.         iravum pakalum kooda

            irunhthu nadaththukintreer

            Kalangkum naeramellaam karam neetti - en

            Kanneer thudaikkintreer

 

4.         paeranpinaalae ennai

            izhuththuk kontiir

            pirinhthidamalae anaiththuk konteer - um

            pillaiyai therinthu konteer

 

5.         Unhthan thuthiyaich solla

            Ennai therinthu konteer

            Uthadukalaith thinam thiranhtharulum

            Puthu raakam thanhtharulum

 

6.         Sinaekam pettraen aiyaa

            Kanam pettraen aiyaa

            Unthan parvaikku arumaiyanaen

            Um sthanathipathiyanaen

 

7.         Ulaka makimaiyellaam

            Umakku iidaakumoa

            Vanam poomiyellaam ozhinhthu poakum

            Um vaarththaiyoa ozhiyaathaiyaa

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு