20 March 2023

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறே

            ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்

 

                        விண்ணிலும் மண்ணிலும் மெய்

                        நாமம் உந்தன் நாமம் ஐயா

                        உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

 

1.         கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான

            ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்

            என்றால் நீர் தானைய்யா-ரூபமும்

            உமக்கில்லை சொருபமும் உமக்கில்லை

            ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

 

2.         உண்டானது எல்லாமே உம்மாலே

            உண்டானது உம் நாம மகிமைக்கே

            உண்டாக்கினீர்- படைப்பு தெய்வமல்ல

            பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல

            கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

 

3.         எல்லாம் வல்ல தெய்வம் நீரே

            எல்லையில்லாதவரே

            உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே

            வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி

            நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...