மாரிக் காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே

மாரிக் காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   மாரிக் காலம் சென்றதே மழையும் பெய்து ஓய்ந்ததே

                        புஷ்பங்கள் பூத்து நல்ல வாசம் வீசுது (2)

                        எந்தன் மணவாட்டியே எந்தன் மணவாட்டியே

                        உந்தன் நேசர் சத்தம் கேட்டு

                                    நீ எழுந்து வா

                                    இன்றே நீ எழுந்து வா - 2

 

 

1.         கன்மலையின் வெடிப்பில் தங்கும் இன்ப புறாவே

            உந்தன் இன்ப சத்தம் நானும் இன்று கேட்க வேண்டுமே - 2

            உந்தன் முகரூபம் காண ஏங்கிடுதே எந்தனுள்ளம்

            உத்தமியே நீ எழுந்து வா வா வா

            உந்தன் நேசரோடு உறவாட வா வா வா -2

 

2.         பனியின் தூறலால் எந்தன் தலையும் நனையுதே

            உந்தன் நேசர் இதயமோ இன்று உன்னைத் தேடுதே - 2

            கைகள் நீட்டும் எந்தனைப்பார் சாக்குப்போக்கு சொல்லிடாதே

            உத்தமியே நீ எழுந்து வா வா வா

            உந்தன் நேசரோடு உறவாட வா வா வா

 

3.         இதயத்தைக் கவர்ந்துக் கொண்ட எந்தன் பிரியமே

            உந்தன் நேசத்தின் உச்சிதங்கள் எனக்கு வேண்டுமே - 2

            திர்சாவின் சௌந்தரியமே அழகும் கெடியுமானவளே

            உத்தமியே நீ எழுந்து வா வா வா

            உந்தன் நேசரோடு உறவாட வா வா வா

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு