23 March 2023

ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆனந்த களிப்புள்ள உதடுகளால்

                        போற்றிப் புகழ்கின்றேன்

                        அறுசுவை உணவு உண்பது போல்

                        திருப்தி அடைகின்றேன்

                        தினமும் துதிக்கின்றேன்

 

1.         மேலானது உம் பேரன்பு

            உயிரினும் மேலானது

            உதடுகள் துதிக்கட்டும்

            உயிருள்ள நாளெல்லாம்

            என் உதடுகள் துதிக்கட்டும்

            உயிருள்ள நாளெல்லாம்

 

2.         தேவனே நீர் என் தேவன்

            தேடுவேன் ஆர்வமுடன்

            மகிமை வாஞ்சிக்கின்றேன்

            உம் வல்லமை காண்கின்றேன்

            வல்லமை காண்கின்றேன்

 

3.         நீர்தானே என் துணையானீர்

            உம் நிழலில் களிகூறுவேன்

            உறுதியாய் பற்றிக் கொண்டேன்

            உம் வலக்கரம் தாங்குதையா

            வலக்கரம் தாங்குதையா

 

4.         கைகளை நான் உயர்த்துவேன்

            திருநாமம் சொல்லி சொல்லி-என்

            படுக்கையிலும் நினைக்கின்றேன்

            இரவினிலும் தியானிக்கின்றேன்

 

                        இரவினிலும் துதிக்கின்றேன்

                        படுக்கையிலும் நினைக்கின்றேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...