உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்

உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்

                        உனக்காகாக பலியாக வந்தார்

                        கலங்காதோ கண்கள் வடியாதோ கண்ணீர்

                        கல்வாரி காட்சியை கண்டு

 

1.         நடமாட முடியா தடுமாறி கிடந்த

            முடவனின் குரல் கேட்டு நின்று

            இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து

            நடமாட செய்ததாலே

            உந்தன் கால்களில் ஆணியோ அரசே

            அதுதான் சிலுவையின் பரிசே

 

2.         கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்

            கதறிடும் மனிதனைக் கண்டு

            கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி

            கருணையாய் சுகம் தந்ததாலே

            உந்தன் கரங்களில் ஆணியோ அரசே

            அதுதான் சிலுவையின் பரிசே

 

3.         இதயத்தில் பாவம் நிறைவானதாலே

            இகமதில் அழிக்கின்ற ஆத்மா

            பாவத்தில் நீக்கி ஜீவனை மீட்க

            இரட்சிப்பின் வழி தந்ததாலே

            உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே

            அதுதான் சிலுவையின் பரிசே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே