18 March 2023

ஆண்டவரே அன்பின் இலக்கணமே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆண்டவரே அன்பின் இலக்கணமே

                        வாருமையா வந்து அருள் தாருமையா

 

1.         பையூரில் இருந்த என்னை

            பொய்யூரில் சேர்த்தவரே

            மெய்யூரை காண வேண்டும்

            பேரருளை தந்திடுவாய்

                        பாவம்தனை போக்கிடுவாய்

                        பாவி என்னை மீட்டிடுவாய்

                        பரலோகம் வரவேண்டும்

                        பாதைதனை காட்டிடுவாய்

 

2.         கடுகளவு விசுவாசம்

            இருந்தால் போதும் என்றாய்

            மலைகூட நகரும் என்று

            மறைநூலில் சொல்லி வைத்தாய்

                        சிந்திக்கவே தவறிவிட்டன்

                        சிலைபோல இருந்துவிட்டேன்

                        சந்திக்கவே வந்துவிட்டேன்

                        சத்குருவே வாருமையா

 

3.         பாலைவனம்தனிலே

            மன்னாவை ஈன்றவனே

            பாவிகள் யாவரையும்

            ஒன்றாக சேர்த்தவரே

                        யோசுவா வழிநடத்த

                        யோசனை சொன்னவரே

                        யோர்தானை கடக்கச் செய்து

                        கானானை தந்தவரே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...