புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள்
புத்தியில்லாதவளோ அதை இடித்து போடுகிறாள்
தேவனை முதலில் தேடுகிறாள்
வசனத்தை தினம் நாடுகிறாள்
- 2
1. கணவன் தலையில் கிரீடம் கீழ்ப்படிகிற மேடம்
இப்படிப்பட்ட மனைவிதான் புருஷனுக்கு வேணும் - 2
இவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்கியவதி
ஆகிறாள் - (2)
கணவனுக்கு இவள் என்றும் குணசாலி ஆகிறாள்
- புத்தியுள்ள
2. நடக்கையிலே பணிவு வார்த்தையிலே கனிவு
கர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்கையிலே
மகிழ்வு - 2
இவள் வாய் திறந்தால் ஞானம் விளங்க திறக்கிறாள்
- (2)
சோம்பலின் அப்பத்தை புசிப்பதில்லை உழைத்து
மகிழ்கிறாள் - புத்தியுள்ள
3. பயபக்தியிலே வளர்ப்பு குடும்ப பொறுப்பில்
சிறப்பு
வளரும் பெண் பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை
நல்ல படிப்பு - 2
இவள் நாணத்தினால்
தன்னை அலங்கரித்துகொள்ளுகிறாள் - (2)
அடக்கம் அன்பு அமைதியாலே
வெற்றி வாழ்க்கை வாழ்கிறாள் - புத்தியுள்ள
- RAVI BHARATH
No comments:
Post a Comment