31 March 2023

இந்த மேகங்களை கடந்து

இந்த மேகங்களை கடந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இந்த மேகங்களை கடந்து

          மோட்ச நாடு சேர்ந்திடுவோம்

            இயேசுவோடு வாழ்ந்திருப்போம்

            இயேசுவோடு மகிழ்ந்திருப்போம்

 

                        மாரநாதா அல்லேலூயா - 4

 

1.         நள்ளிரவோ அதிகாலையோ

            மாலையோ நடுப்பகலோ

            நினையாத நேரம் வந்திடுவார்

            விழிப்புடன் காத்திருப்போம்

 

2.         நம் மீட்பு மிக சமீபம்

            தலைகளை உயர்த்திடுவோம்

            மணவாளன் இயேசு வருகின்றார்

            மகிமையில் சேர்ந்திடுவோம்

 

3.         நோவாவின் நாட்களைப் போல்

            இந்நாட்கள் மாறினதே

            கறை திறையின்றி வாழ்ந்திடுவோம்

            பரிசுத்த மணவாட்டியாய்

 

4.         விசுவாசம் காத்துக் கொள்வோம்

            ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

            நீதியின் கிரீடம் தந்திடுவார்

            நியாதிபதி இயேசு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...