16 March 2023

என் ஜெபத்தைக் கேட்கிறார் எனக்கு அருள்கிறார்

என் ஜெபத்தைக் கேட்கிறார் எனக்கு அருள்கிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                  என் ஜெபத்தைக் கேட்கிறார் எனக்கு அருள்கிறார்

                       கன்மலையில் என்னை வைத்துப் பாதுகாக்கிறார்

                       அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன்

                       மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன்

 

1.        வறண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும்

           வழியறியாமல் திகைத்து நின்றாலும்

           வருத்தம் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லையே

           வழி நடத்தும் தேவன் கரம் குறுகவில்லையே

 

2.        வியாதி வறுமையால் சோர்ந்து விட்டாலும்

           வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக் கொண்டாலும்

           ஒன்றும் என்னைக் கலங்க வைக்க முடியவில்லையே

           கர்த்தர் கிருபை என்னை விட்டு விலக வில்லையே

 

3.        கடலின் அலையில் நான் பயணம் செய்தாலும்

           காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும்

           எதுவும் என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே

           கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே

 

4.        அத்தி மரங்களில் இலையுதிர்ந்தாலும்

           திராட்சைக் கொடிகளில் கனி அழிந்தாலும்

           சுற்றிப் பஞ்சம் நேர்ந்த போதும் கலக்கமில்லையே

           கர்த்தர் கருணை என்னைத் தாங்கும் வருத்தமில்லையே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...