31 March 2023

கண்ணை மூடும் மந்திரத்தில

கண்ணை மூடும் மந்திரத்தில

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          கண்ணை மூடும் மந்திரத்தில

            கைய கட்டும் தந்திரத்தில

            சாத்தானும் நம்மல ஆட்டி படைக்கிறான்

            காணாமல் போகும் மின்னலபோல்

            கர்சிக்கிற சிங்கத்தைபோல் - கொஞ்சம்

            ஏமாந்தால் நம்மளை விழுங்க பார்க்கிறான்

                        விரட்டு விரட்டு விரட்டு சாத்தானை ஓட ஓட விரட்டு

                        மிரட்டு மிரட்டு மிரட்டு இயேசு நாமத்தால மிரட்டு

 

1.         வெளியில வேசக்காரன்

            உள்ளுக்குள்ள மோசக்காரன்

            ஒன்னும் தெரியாதவன் போல் நடிக்கிறான்

            மயக்கும் தந்திரக்காரன் மாந்திரீக மந்திரக்காரன்

            பூமியில ராட்டிணம் போல் சுத்துரான்

            நில்லாத வேகத்தில பொல்லாத ரூபத்தில

            அங்கும் இங்கும் ஆளத்தேடி அலைகிறான்

            நப்பாச நமக்கும்மூட்டி தப்பான ரூட்டை காட்டி

            அப்பாவி மக்களை வாட்டி வதைக்கிறான் - அவன்

            அப்பாவி மக்களை வாட்டி வதைக்கிறான்

                        கடத்து கடத்து கடத்து சாத்தானை நாட்டை விட்டு கடத்து

                        துறத்து துறத்து துறத்து வேத வசனத்தால துறத்து

 

2.         பொய்யான சோதனை காரன்

            பொல்லாத வேதனை காரன்

            பொல்லாப்பை பூமியிலே விக்கிறான்

            கொலை வெறி வேட்டைக்காரன்

            கோபமுள்ள சேட்டைக்காரன்

            கொடூரமாக வந்து நிற்கிறான் - அவன்

            கொடூரமாக வந்து நிற்கிறான்

            அதிசயமானவரோ கை நீட்டி அடக்கும் போது

            அப்போதான் சாத்தானும் அடங்குறான்

            ஆவியானவரோ சாத்தானை அதட்டும் போது

            ஐயோனு சத்தம் போட்டு அலறுரான் - அம்மா

            ஐயோனு சத்தம் போட்டு அலறுரான்

                        அடக்கு அடக்கு அடக்கு சாத்தானின் ஆட்டத்தை நீ அடக்கு

                        அதட்டு அதட்டு அதட்டு அந்நிய பாசையால அதட்டு

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...