14 March 2023

என்னை நடத்தும் இயேசு நாதா

என்னை நடத்தும் இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   என்னை நடத்தும் இயேசு நாதா

                        உமக்கு நன்றி ஐயா

                        எனக்குள் வாழும் எந்தன் நேசா

                        உமக்கு நன்றி ஐயா

 

1.         ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்

            உமக்கு நன்றி ஐயா

            அழிவில் நின்று பாதுகாத்தீர்

            உமக்கு நன்றி ஐயா

 

2.         தேடி வந்தீர் பாட வைத்தீர்

            உமக்கு நன்றி ஐயா

            ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்

            உமக்கு நன்றி ஐயா

 

3.         பாவமில்லா துாயவாழ்வு

            வாழச் செய்பவரே

            பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி

            மலரச் செய்பவரே

 

4.         துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்

            உமக்கு நன்றி ஐயா

            புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்

            உமக்கு நன்றி ஐயா

 

5.         கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்

            உமக்கு நன்றி ஐயா

            கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்

            உமக்கு நன்றி ஐயா

 

6.         உலகம் மாயை எல்லாம் மாயை

            உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்

            உறவு பாசம் குப்பையென்றறிந்து

            உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்

 

7.         யெகோவாயீரே பார்த்துக் கொள்வீர்

            உமக்கு ஆராதனை

            யெகோவா நிசியே வெற்றி தருவீர்

            உமக்கு ஆராதனை

 

8.         யெகோவா ரூவா நல்ல ஆயன்

            உமக்கு ஆராதனை

            யெகோவா ரஃப்பா சுகம் தந்தீரே

            உமக்கு ஆராதனை

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...