இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
இயேசுவே
உம்மை பாடுவேன்
- நான்
நேசரே
உம்மை போற்றுவேன்
உலகத்தில்
உதித்த உன்னதரே
- உம்மை
என்றும்
பாடிடுவேன்
1. பாவத்தை
போக்க பலியாக வந்த
பரனே உம்மைப்
பாடுவேன்
பாவத்தை
வெறுத்து பாவியை
அணைத்து
பரமனே உம்மை
பாடுவேன்
பாரினில்
வந்து பழி சுமந்தீரே
பாவ பலியாய்
அடிக்கப் பட்டீரே
பரமனே உம்மை
பாடுவேன் - நான்
என்றும்
பாடிடுவேன்
2. சாரோனின்
ரோஜா சாந்த சொரூபா
உம்மையே
நான் பாடுவேன்
சாவினை
வென்று சாத்தானை
ஜெயித்த
யேசுவே
உம்மை பாடுவேன்
சகலமும்
படைத்த சீர் இயேசு
நாதா
அகிலமும்
போற்றும் ஆருயிர்
நாதா
தேவனே உம்மை
பாடுவேன் - நான்
என்றும்
பாடிடுவேன்
3. தேவகுமாரா
தேற்றரவாளனே
உம்மையே
நான் பாடுவேன்
ஆறுதல்
தந்து என்னை தேற்றி
மார்புடனே
இருப்பவரே
தேடி வந்த
தேவ சுதனே
தன்னையே
தந்த தேவாதி தேவா
தினமும்
உம்மை பாடுவேன்
- நான்
என்றும்
பாடிடுவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment