இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வேசம் போடுறான்
மனுசன் வேசம் போடுறான்
சஞ்சலப்படுகிறான்
வீணா சஞ்சலப்படுகிறான்
1. ஆஸ்தி
ஜாஸ்தி சேர்த்து
வைத்து ஆட்டம்
போடுறான்
- 2
அதை வாரிக்கொள்வார்
யாரோ என்பதை மறந்து
போகிறான் - 2
பண ஆசைக்கு
பேரு எல்லா
தீமைக்கும் வேறு
- 2
என எடுத்துரைக்கும்
வேதம் சொல்லும்
வழி துறந்து
தனை மறந்து
வேசம் போடுறான்
சஞ்சலப்படுகிறான்
அழிந்து
போகிறான்
ஐய்யய்யோ! -
வேசம் போடுறான்
2. கோட்டு
சூட்டு போட்டு
உலகை மாற்ற நினைக்கிறான்
- 2
மனக்கூட்டுக்குள்ளே
பொய்யு புரட்டு சிரிச்சி மழுப்புறான்
- 2
பணம் சேர்ந்திடும்போது
குணம் மாறுது
பாரு - 2
ஒரு காதருந்த ஊசி
கூட வருவதில்லை
இத மறந்து
வேசம் போடுறான்
சஞ்சலப்படுகிறான்
அழிந்து
போகிறான்
ஐய்யய்யோ! -
வேசம் போடுறான்
3. உண்டு பெருத்து திண்ணு
கொழுத்து
வாழ நினைக்கிறான்
- 2
தினம் கண்டுகழித்து
திரைப்படங்களை
நாடி அலைகிறான்
- 2
உண்டு உறங்கும்
உடலிது சாவுக்கேதுவானது
- 2
ஒரு பாடை ஏறி மண்ணுக்குள்
இறங்கி மாய்ந்து
போகும் இதை மறந்து
வேசம் போடுறான்
சஞ்சலப்படுகிறான்
அழிந்து
போகிறான்
ஐய்யய்யோ! -
வேசம் போடுறான்
4. பரிசுத்தமான
சாதி என்று பாட்டு
பாடுறான்
- 2
பையன் கல்யாணத்துக்கு
சொந்த சாதி பொண்ணு தேடுறான் -
2
பொண்ணு
கல்யாணத்துக்கு
சொந்த சாதி பையன்
தேடுறான்
-2
பரலோக நாட்டிலே பல
சாதி ஏதுங்க
பூலோக சாதி பேதமெல்லாம்
அங்கே இல்ல
அதை மறந்து
வேசம் போடுறான்
சஞ்சலப்படுகிறான்
அழிந்து
போகிறான்
ஐய்யய்யோ! -
வேசம் போடுறான்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment