06 March 2023

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல

                        துதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்து

                        மனம் துள்ளுதையா

 

1.         அன்பு பெருகுதையா - என்

            அப்பாவின் நிழல்தனிலே

            அபிஷேகம் வளருதையா

            எபிநேசர் பார்வையிலே

 

2.         உள்ளங்கள் மகிழுதையா

            உம்மோடு இருக்கையிலே

            பள்ளங்கள் நிரம்புதையா

            பாடி துதிக்கையிலே

 

3.         நம்பிக்கை வளருதையா

            நாதா உம் பாதத்திலே

            நன்மைகள் பெருகுதையா

            நாள்தோறும் துதிக்கையிலே

 

4.         நோய்கள் நீங்குதையா - உம்மை

            நோக்கிப் பார்க்கையிலே

            பேய்கள் அலறுதையா

            பெரியவர் நாமத்திலே

 

5.         கண்ணீர்கள் மறையுதையா

            கர்த்தர் உம் சமூகத்திலே

            காயங்கள் ஆறுதையா

            கருத்தோடு துதிக்கையிலே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...