07 March 2023

இன்னும் எத்தனை தூரம் பயணம்

இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        இன்னும் எத்தனை தூரம் பயணம் செய்யணும் நாதா

                        இன்னும் எத்தனை காலம் பாடுகள் நாதா - 2

                        என்னால் முடியவில்லை முடியவில்லை நாதா

                        உம் பெலன் தந்து தாங்க வேண்டும் நாதா - 2

                        தேவா இயேசு தேவா - 2 - இன்னும்

 

1.         கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள் - 2

            உருண்டு புரண்டு எனை விழுந்திட செய்யுதே

            விடாத மனமொடிந்து நடந்திடும் என்னையும் - 2

            வழுவாமல் வழி நடத்தி செல்லணும் என் தேவனே

            நாதா இயேசு தேவா - 2 - இன்னும்

 

2.         அக்கினி கடல்தனில் நடந்து நான் செல்கையில்

            ஆக்கினை அணுகாது காக்கும் என் தேவனே - 2

            அலைபோல் வெள்ளம் என் மேல் புரண்டு வந்தாலும்

            மலை போல் வந்து நின்று தடுக்கும் என் தேவனே - 2

            நாதா இயேசு தேவா - 2 - இன்னும்

 

3.         உறவுகள் உதறும் போது உந்தன் மார்பில் சாய்குவேன்

            விழிகளில் கண்ணீரோடு உந்தன் பாதம் சேருவேன்

            மார்போடு அணைத்து என்னை முத்தமிடும் தெய்வமே

            மறவாத உந்தன் அன்பை நினைத்து நான் ஏங்குவேன்

            நாதா இயேசு தேவா - 2 - இன்னும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...