09 March 2023

விசாரிக்கும் தேவன் ஒருவர் உண்டல்லவா

விசாரிக்கும் தேவன் ஒருவர் உண்டல்லவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          விசாரிக்கும் தேவன் ஒருவர் உண்டல்லவா - உன்னை

            விசாரிக்கும் தேவன் ஒருவர் உண்டல்லவா

                        கலங்கி தவிக்கின்றாயோ

                        கதறி அழுகின்றாயோ

                        கவலைகள் எல்லாமே

                        அவர்மேலே வைத்துவிடு

                        அவரே ஆதரிப்பார்

                        அன்பாலே அரவணைப்பார்

 

1.         ஆடுகள் மேய்த்தவனை அரசனாய் மாற்றினார்

            மீன்கள் பிடித்தவனை சீடனாய் மாற்றினார்

            உன்னையும் உயர்த்திட ஒருவரும் இல்லையோ

            கவலைப் படவேண்டாம் கண்ணீரும் விடவேண்டாம்

 

2.         குழியில் கிடந்தவனை அதிபதி ஆக்கினார்

            சவுலை பவுலாக்கி பரிசுத்தமாக்கினார்

            உன்னையும் உயர்த்திட ஒருவரும் இல்லையோ

            கவலைப் படவேண்டாம் கண்ணீரும் விடவேண்டாம்

 

3.         சிங்கத்தின் கெபியிலும் தானியேல் பிளைத்திட்டான்

            சீரிய அலையிலும் படகை தப்புவித்தார்

            உனக்கும் உதவிட ஒருவரும் இல்லையோ

            கவலைப் படவேண்டாம் கண்ணீரும் விடவேண்டாம்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...