13 March 2023

இராஜா நீர் செய்த நன்மைகள்

இராஜா நீர் செய்த நன்மைகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                        ராஜா நீர் செய்த நன்மைகள்

                        அவை எண்ணி முடியாதையா

                        ஏறெடுப்பேன் நன்றிபலி

                        என் ஜீவ நாளெல்லாம - நான்

                        நன்றி ராஜா இயேசு ராஜா (4)

 

1.         அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி

            புது கிருபை தந்தீரையா

            ஆனந்த மழையில் நனைத்து நனைத்து

            தினம் நன்றி சொல்ல வைத்தீரையா - 2 நன்றி

 

2.         வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட

            உம் வெளிச்சம் தந்தீரையா

            பாதம் அமர்ந்து நான் உம் குரல்

            கேட்கும் பாக்கியம் தந்தீரையா

 

3.         ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து

            பாதுகாத்து வந்தீரையா

            உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி

            வழி நடத்தி வந்தீரையா

 

4.         துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்

            தூக்கிச் சென்றீரையா

            அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம்

            அதிசயம் செய்தீரையா (ஆறுதல் தந்தீரையா)

 

5.         கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து

            விடுதலை தந்தீரையா

            குறைகளை நீக்கி கரைகளைப் போக்கி

            கூடவே வந்தீரையா

 

6.         உமக்காக வாழ உம் நாமம் சொல்ல

            தெரிந்து எடுத்தீரையா

            உம்மோடு வைத்து ஊழியனாக

            உருவாக்கி வந்தீரையா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...