07 March 2023

பரம குயவனே என்னை வனையுமே

பரம குயவனே என்னை வனையுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

பல்லவி

                   பரம குயவனே என்னை வனையுமே

                        உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)

 

அனுபல்லவி

உமக்காக என்னை வனையுமே

களிமண்ணான என்னை வனைந்திடுமே

 

சரணங்கள்

1.         உம் கரத்தாலே மண்ணை பிசைந்து

            மனிதனை உருவாக்கினீர் (2)

            எந்தனையும் தொட்டு உம் சாயலாக வனையும்

            உம்மை போல மாற்றிடுமே - என்னை                           - பரம

 

2.         உமக்குகந்ததாய் உடைத்து என்னை

            உம்முடைமை ஆக்கிடுமே (2)

            விருப்பம் போல என்னை உந்தன் கரத்தால்

            அருமையாக வனைந்திடுமே - உமக்கு                        - பரம

 

3.         உமது சித்தத்தின் மையத்தில் என்னை

            வைத்து என்றும் வழி நடத்திடும் (2)

            உந்தன் சித்தம் செய்ய என்னை தத்தம் செய்தேன்

            முழுமையாக அர்ப்பணம் செய்தேன் - என்னை              - பரம

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...