06 March 2023

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்

                        ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்

                        பாலன் பிறந்தார் அன்று

                        பாசத் திருநாள் இன்று

                        தீபச் சுடர் ஏந்துங்கள்

                        பாலன் முகம் காணுங்கள்

 

1.         பூக்களின் எழில் புன்னகைதனில்

            இறைமகன் பாசம் காணலாம்

            நீரலை எழும் நீர்கடல்தனில்

            இறைமகன் நேசம் காணலாம்

            பகலிலே மேகமாய் இரவிலே தீபமாய்

            காக்கும் இறை நாமமே

            கலங்காதே நாம் வாழலாம்.

 

2.         பாரினில் புகழ் பரனின் அருள்

            மழைத்தரும் மேகம் ஆகுமே

            பாலகன் பாதம் பணிந்திடும் மனம்

            ஒளிவிடும் தீபம் ஆகுதே

            அமைதியே செல்வமாய்

            அருளையே அமுதமாய்

            தாரும் இறை இயேசுவே

            எம் வாழ்வு ஒளிவீசுமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...