13 March 2023

உன்னில் நானே மகிமைப் படுவேன்

உன்னில் நானே மகிமைப் படுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    உன்னில் நானே மகிமைப் படுவேன்

                        உன்னை மேன்மையாய் வைத்திடுவேன்

                        உன்னை நானே தெரிந்து கொண்டேன்

                        உன்னோடு நான் இருப்பேன் - இஸ்ரவேலே

                        உன்னோடு நான் இருப்பேன்

 

1.         வல்லமை வரங்கள் தந்திடுவேன்

            அதிசயங்கள் பல செய்திடுவேன்

            உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய்

            இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய்

            அற்புதங்கள் செய்திடுவேன்

            நான் உன்னில் மகிழ்ந்திருப்பேன் - உன்னில்

 

2.         உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன்

            அற்புதங்கள் பல செய்திடுவேன்

            வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமே

            சுகமும் பலத்தையும் பெற்றிடுவாய்

            ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன்

            நான் உன்னில் மகிழ்ந்திருப்பேன் - உன்னில்

 

3.         சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன்

            சாதனைகள் பல செய்திடுவாய்

            கபடில்லா இதயத்தை தந்திடுவேன்

            கசப்பும் வருத்தமும் மாறிடுமே

            சமாதானம் தந்திடுவேன்

            நான் உன்னில் மகிழ்ந்திருப்பேன் - உன்னில்

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...