07 March 2023

புதிய வானம் புதிய பூமியும் மறுபடியும்

புதிய வானம் புதிய பூமியும் மறுபடியும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          புதிய வானம் புதிய பூமியும்

            மறுபடியும் உண்டாகும்

            தேவன் சொன்ன வார்த்தையின் படி

            நீதி அங்கு கிடைக்கும்

                        மண் ஆசை பொன் ஆசைக்கு

                        ஏலம் போகும் உலகம்

                        பரிசுத்தமாய் வாழ்ந்தால்தானே

                        போவாய் பரலோகம் - 2 - புதிய வானம்

 

1.         மாடி வீடு கோபுரம் கட்டி

            வாழும் வாழ்க்கை வீணடா

            மண்ணிலே உன் கூடாரமே

            விழுந்து போகும் பாரடா - 2

                        நிலையான நித்திய வீடு - (2)

                        பரலோகம் தானடா - 2

                        பரம வாசல் அங்கே உனக்கு

                        மரணம் கூட இல்லையடா - (2) - புதிய வானம்

 

2.         இராஜாதி ராஜனாகத்தான்

            தேவன் அங்கு இருப்பார்

            உண்மையுள்ள மனிதர்கள் மட்டும்

            கர்த்தரோடு இருப்பார் - 2

                        பூமியிலே பொக்கிசத்தை நீ - (2)

                        சேர்த்து வைக்கும் நேரமடா - 2

                        கண்ணமிடும் திருடர்களாலே

                        எல்லாம் பறிபோகுமடா - (2) - புதிய வானம்

 

3.         பசியும் இல்லை தாகம் இல்லை

            பரலோகத்தில் உனக்கு

            இரவும் இல்லை பகலும் இல்லை

            பயமும் இல்லை நமக்கு - 2

                        ஆவியான தேவன் தருவார் - (2)

                        பாதை அங்கு உனக்கு - 2

                        காவலாக கர்த்தர் வருவார்

                        கவலை இல்லை நமக்கு - (2) - புதிய வானம்

 

 

- கானா பாலா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...