இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
நான்
நிற்பதும்
நிர்மூலமாகாததும்
தேவ கிருபையே
நான் உயிருடன்
வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே
கிருபையே
தேவகிருபையே
தேவகிருபையே
தேவகிருபையே
- 2
1. காலையில்
எழுவதும் கர்த்தரை
துதிப்பதும்
மாலையில்
காப்புடன்
இல்லம் வருவதும்
கிருபையே
போக்கிலும்
வரத்திலும் தொலதூர பயணத்திலும்
- 2
பாதம் கல்லில்
இடறாமல் காப்பதும்
கிருபையே - உன்
- 2
2. அக்கினி
நடுவினிலே என்னை
எரித்திட
நேர்ந்தாலும்
தூதனாக
நின்று என்னை காப்பதும்
கிருபையே
ஆழியின்
நடுவினிலும்
சீறிடும்
புயலினிலும்
- 2
நீர்மேல்
நடந்து வந்து என்னைக்
காப்பதும்
கிருபையே - 2
3. கண்ணீர்
கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின்
கைக்கு விலக்கி
காப்பதும்
கிருபையே
ஆற்றித்
தேற்றியே
அரவணைத்திடும்
- 2
மாபெரும்
கிருபையே எங்கள்
தேவ கிருபையே -
2
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment