இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
எழும்பி
பிரகாசி உன் ஒளி
வந்தது
கர்த்தர்
மகிமை உன்மேல்
உதித்தது
பூமியையும்
ஜனங்களையும் காரிருள்
மூடும்
ஆனாலும்
உன் மேல் கர்த்தர்
உதிப்பார்
1. உன் குமாரரும்
குமாரத்திகளும்
உன் அருகினில்
வளர்க்கப்படுவர்
உன் கண்ணால்
கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம்
மகிழ்ந்து பூரிக்கும்
2. உன்னை சேவிக்கா
ஜாதிகள் அழியும்
இராஜ்ஜியங்களும்
பாழாகப் போய்விடும்
கர்த்தர்
நகரம் பரிசுத்தரின்
சீயோன்
என்று கூறி
நீ அழைக்கப்படுவாய்
3. உன் தேசத்திலே
கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில்
நாசமும் வராதே
உன் மதில்களை
இரட்சிப்பென்று
சொல்வாய்
உன் வாசல்களை
துதியென்று சொல்வாய்
4. சூரியன்
இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன்
இனி மறைவதுமில்லை
கர்த்தரே
நித்திய வெளிச்சமாவாரே
உன் துக்க
நாட்கள் முடிந்து
போயிற்றே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment