06 March 2023

அப்பாலே போ சாத்தானே

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                    அப்பாலே போ சாத்தானே

                        அப்பாலே போ சாத்தானே

                        பெருமைகொண்டவன் நீதானே

                        தள்ளப்பட்டவன் நீதானே

 

                        நான் இருப்பது இயேசுவின் இரத்த கோட்டைதான்

                        என்னை நெருங்கினால் நீ போவதுதான் பாதாளம்தான்

                        சிலுவையில் உன்னை ஜெயித்தவர் எங்க அப்பாதான்

                        அந்த ஜெயக்கிறிஸ்து இயேசுவுக்கு பிள்ளை நானுதான்

 

1.         ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றினாயே

            அற்ப கல்லை காட்டி மோசம் செய்த நீதானே

 

            ஆலயத்திற்கு போகவிடாமல் தடுப்பவன் நீயே

            எங்கள் ஆண்டவன் இயேசுவை வணங்கிடாமல் கெடுப்பவன் நீயே

 

            ஜெபிக்கும் போது தூக்கத்தை நீ கொடுப்பவன்தானே

            பைபிள் படிக்கும் போது மனசை கெடுக்கும் சாத்தான் நீதானே

            தந்திரமாக நீயும் வேலை செய்யிறே

            நீ நினைச்சது ஒன்றும் நடக்கல ஏமாந்து போகிறே

           

2.         வியாதிகளை கொண்டுபவருபவன் நீதான் சாத்தானே

            கொடிய வேதனைகளை கொடுத்தவனும் நீதான் சாத்தானே

 

            சோதிக்கும் சோதனைக்காரன் நீதான் சாத்தானே

            சிற்றின்பங்களை தருபவனும் நீதான் சாத்தானே

 

            சந்தோசத்தை கெடுப்பவனும் நீதான் சாத்தானே

            பல சங்கடங்களை கொண்டுவருபவன் நீதான் சாத்தானே

            சாத்தானே உன் ஆயுதங்கள் ஒன்றும் பலிக்காது

            சர்வ வல்லவரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது

           

3.         நாய்ப்படாத பாடுகளை எனக்குத் தந்தாயே

            தேவன் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே

 

            யோபுவை போல துன்பங்களை நீ எனக்கு தந்தாயே

            எனக்குள்ளதையெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே

 

            இவ்வூலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது

            இவை இனி வருகின்ற மகிமைக்கென்றும் ஒப்பாய் ஆகாது

            என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானோ

            உன்னை பாதாளத்துக்கு அனுப்பும்வரை ஓய்ந்திருப்பேனோ

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...