06 March 2023

ஆராதனை செய்வோம் துதி

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராதனை செய்வோம்

                        துதி ஆராதனை செய்வோமே

                        அல்லேலூயா பாடி

                        துதி ஆராதனை செய்வோமே

 

1.         பாசிட்டிவா பேசுங்க

            போகப்போகப் பாருங்க

            நெகட்டிவே வேணாங்க

            ஆராதிக்க வாங்க

 

2.         எம்டியா இருந்தாலும்

            பில்லப் பண்ணி விடுவாரே

            புல்லாக இருந்தாலும்

            ஜாய்புல்லா வைப்பாரு

            ஒன்னுமே இல்லனு எப்பவுமே சொல்லாத

            நாலேஜே இல்லனு மொக்கப்போடு போடாத

 

3.         தலைமுறைக்கும் தலைமுறைக்கும்

            இருப்பேன்னு சொன்னாரே

            எங்கே நான் போனாலும்

            வருவேனு சொன்னாரே

            ஆமானு சொன்னாரே

            ஆமென் என்று சொன்னாரே

            இருக்கிறவர் சொன்னாரே

            இருப்பேனு சொன்னாரே

 

4.         அப்பமும் தண்ணீரும்

            ஆசீர்வாதமாகுமே

            அடுக்கடுக்கா அப்பமும்

            பெருகத்தான் செய்யுமே

            அப்பாவே சொன்னாரே

            தப்பாமல் வருவாரே

            இயேசப்பா எங்களை

            சப்ரைசா செய்வாரே

 

            நேசிக்கிறேன் நேசிக்கிறேன்

            நேசிக்கிறேன் இயேசுவை

 

5.         தட்டுங்கள் திறப்பாரே

            கேட்டாக்கா கொடுப்பாரே

            தேடினால் வருவாரே

            பாடினாலும் வருவாரே

            நேசிக்க வந்தாரே

            நேசிக்கத்தான் வந்தாரு

            இயேசப்பா வந்தாரே

            நமக்காக வந்தாரே

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...