07 March 2023

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

தேவா நான் எதினால் விசேஷித்தவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                                    பல்லவி

 

          தேவா நான் எதினால் விசேஷித்தவன்

            ராஜா நான் அதை தினம் யோசிப்பவன்

 

                        அனுபல்லவி

 

                        எதினால் இது எதினால்

                        நீர் என்னோடு வருவதினால்

                        எதினால் இது எதினால்

                        நீர் என்னோடு இருப்பதினால்

 

                        சரணங்கள்

 

1.         மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது

            பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது

            அன்பான தேவன் என்னோடு வருவார்

            அது போதும் என் வாழ்விலே - தேவா

 

2.         தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது

            ஆவல் கொண்ட கன்மலையும் கூட செல்லுது

            என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார்

            சந்தோஷம் நான் காணுவேன் - தேவா

 

3.         வாழ்க்கையில் கசப்புகள் கலந்திட்டாலும்

            பாசமுள்ள ஒருமரம் கூடவருது

            மாராவின் நீரை தேனாக மாற்றும்

            என் நேசர் என்னோடுண்டு - தேவா

 

4.         பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது

            பரிசுத்தமான அக்னி ஸ்தம்பம் செல்லுது

            ஆகா என் தேவன் தந்தாரே

            நல்ல மங்காத அபிஷேகமே    

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...