பொன் மங்கி நிறமும் மாறி

பொன் மங்கி நிறமும் மாறி

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

 

                   பொன் மங்கி நிறமும் மாறி

                        அழிந்து போகுமானால்

                        இரும்பின் நிலை என்ன - ஐயோ

                        இரும்பின் நிலை என்ன

                        நீதிமானே இரட்சிக்கப்படுதல்

                        அரிய செயல் என்றால்

 

                                    துரோகியின் நிலை என்ன - தேவ

                                    துரோகியின் நிலை என்ன

 

1.         மோசே என்னும் தேவ மனிதன்

            பசும் பொன் போலவே விளங்கிடினும்

            கானான் போகவில்லையே - அவன்

            கானான் போகவில்லையே

            நீயும் உன்னையே தேவப் பிள்ளையே

            நிற்கிறதாக எண்ணுகிறாயோ

            நியாயத்தீர்ப்பிலே கோதுமை பறக்க

            பதர் எம்மாத்திரம்

 

2.         காலம் இனியும் செல்லாதே

            கடைசி செய்தியை அறிவிப்பாயே

            சோர்ந்து போகாமலே - மனம்

            சோர்ந்து போகாமலே

            ஆவியானவர் துணை செய்வார்

            ஆத்தும ஆதாயம் செய்திடுவோம்

            கிறிஸ்துவை உடையவன்

            பேசாவிட்டால் கல்கள் கூப்பிடுமே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு