18 April 2023

பாலகன் பிறந்தார் பாரினை மீட்க

பாலகன் பிறந்தார் பாரினை மீட்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          பாலகன் பிறந்தார் பாரினை மீட்க

            தூதர்கள் விண்ணில் இன்னிசை மீட்க

                        உயர் கன்னிமரி வயிற்றில் வந்த அரும்பே

                        எங்கள் நெஞ்சமெல்லாம் கட்டிக் கரும்பே

                        மனம் துள்ளி துள்ளி உந்தன் புகழ் பாடிடுமே

                        தேவ வார்த்தை இங்கு மனுவான அதிசயமே

 

1.         இம்மானுவேலாக மண்ணில் வந்த நிலவொளி நீதானே

            தித்திக்கின்ற தேனாக இயேசு என்னும் உம் பெயரே - 2

            ஏழ்மையின் கோலத்தில் இறை மைந்தன் வந்தாயே

            முன்னணை மஞ்சத்தில் புகழிடம் கொண்டாயே

            என்னை மீட்க உலகில் வந்த அதிசய ராஜனே

                        புது வாழ்வு புது ஜீவன் வந்திடுமே உம் வரவால்

 

2.         அலைக்கடல் வற்றும் உந்தன் அன்பு என்றும் வற்றாதே

            இமை மூடி உம்மை பணிந்தால் துன்பம் எம்மை பற்றாதே - 2

            திரித்துவ தேவனே எம்மை ஆளும் ராஜனே

            என் மனவாளனே ஜோதி பிரகாசனே

            விண்னாளும் மன்னவர் உலகில் வேறேது நாமமே

                        தொழுதிடுவோம் புகழ்ந்திடுவோம் வணங்கிடுவோம் வாழ்த்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...