அனாதைகளின் தெய்வம் நீர்
ஆதரவற்றோரின் தெய்வம் நீர்
- 2
சகாயர் இல்லாதவர்க்கு சகாயர்
நீர்
தகப்பன் இல்லாதவர்களுக்கு
நீரே தகப்பனே
1. எளியவரை உயர்த்தினீர்
சிறியவரை எழுப்பினீர்
பிரப்புக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே
- 2
பிள்ளைகள் இல்லா மலடியை
பிள்ளத்தாச்சியாய் மாற்றினீர் - அவள்
நிந்தைகள் எல்லாம்
நிவர்த்தி செய்யும் தகப்பனே - 2
2. சத்துவம் இல்லாத மனிதருக்கு
சத்துவத்தை அளிக்கிறீர்
பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே - 2
திக்கற்று நிற்கும் விதவையின்
விண்ணப்பங்களை கேட்கிறீர் - அவள்
எல்லைகள் எங்கும் தொல்லைகள்
நீக்கும் தகப்பனே - 2
3. ஏழையினை நினைக்கிறீர்
அழுதிடும் போது அனைக்கிறீர்
இடுக்கன் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே
- 2
உடைந்து சிதறிய மனதினை
உள்ளங்கையிலே ஏற்றினீர் - அதன்
காயங்கள் ஆற்றும்
அன்றாடம் தேற்றும் தகப்பனே - 2
No comments:
Post a Comment