வண்ண வண்ண பூக்கள் பாரு செல்லம்மா
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
வண்ண வண்ண
பூக்கள் பாரு செல்லம்மா
வாசலெங்கும்
நட்சத்திரம் ஏனம்மா
கண்ணு
ரெண்டும்
ஜொலிக்கிறதே
செல்லையா
அந்த
காரணத்தை கச்சிதமா
சொல்லையா
ஏசு
பாலன் பிறந்ததினால்
பூவுலகம்
மகிழுதம்மா
பாச மழை
பொழிவதினால்
பாவமதில்
கரையுதம்மா
ஒரு ஏழை
வடிவில் ஏசு
பிறந்த தேவை எதுக்கு
மாமா
உலகாளும்
இறைவன் மனிதம்
காக்க வாக்கு தந்ததுதாம்மா
1. பரமன் முகம்
பாரு வெள்ளைப்
பனியை மிஞ்சும்
அழகு
மரியன்னை
மடி மீது தவழும்
நிலவு தாய்யா
பிஞ்சுப்பாதம்
பாரு கண்ணைப்பறிக்கும்
கொள்ளை அழகு
அரியணை
இல்லாத அரசர் இவரு
தாம்மா
ஆசையாய்
ஆசையாய் அள்ளிக்கொஞ்சப்
போவோமா
ஆயிரம்
பூக்களை அவருக்கு
நான் சூட்டவா
தாவி
வரும் மேகங்களை
கேளைய்யா
அதை பாலனுக்கு
மெத்தையாக்கி
போடையா
ஏசுவுக்கு
சிம்மாசனம்
ஏதம்மா
நம்ம
இதயத்திலே
இடம் இருந்தால்
போதுமம்மா
2. கர்த்தரிடம்
கேளு நம்ம
கவலையெல்லாம்
தூளு
கடவுளின்
மகனான கருணை இதயம்
தாய்யா
நம்ம
விமலன் பெயர்
கூறு நெஞ்சில்
வெள்ளி முளைக்கும்
பாரு
விடியலின்
சுடராக உதித்த
ஜோதி தாம்மா
ஏசையா
ஏசையா எங்கள்
செல்வம் தானய்யா
நல்ல மேய்ப்பரும்
அவரம்மா மீட்பரும்
அவரம்மா
ஏழைகளின்
பங்காளரைப்
பாரையா
அவர் இரக்கத்திலே
வாழும் இந்தப்
பாரைய்யா
பாவிகளின்
ரட்சகரைப்
பாரம்மா
அவர் பாசத்திலே
மீளுதிந்தப்
பாரம்மா
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment