இயேசையா பிளந்த ஆதி மலையே

இயேசையா பிளந்த ஆதி மலையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

255. இராகம்: சங்கராபரணம்                                                   ஏகராளம்

         

பல்லவி

 

          ஏசையா, பிளந்த மலையே

            மோச நாளில் உன்னில் ஒளிப்பேனே.

 

சரணங்கள்

 

1.         மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;

            தோஷம் நீக்கும் இரு[1]மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. - ஏசையா

 

2.         இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,

            மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவரோகமே; - ஏசையா

 

3.         பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,

            நேரஸ்தரின்[2] பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; - ஏசையா

 

4.         வெறுங்கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சி

            திருச்சிலுவை தஞ்சம் புகுந்து,-தியங்கி அணைத்தே நிற்பேன்; - ஏசையா

 

5.         அருளிலிருளோன் ஆனாலும், அபயமுன் தன் நீதிக்கே!

            கருணை ஊற்றில் கழுவமாட்டாயோ?-கழுவாயாகில் சாவேனே; - ஏசையா

 

6.         ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்,

            தேவாசனமுன் அஞ்சி நிற்க-தேவலோக மேறிலும், - ஏசையா

- உயர்அருள்திரு. ஆர்.சி. கால்டுவெல்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 



[1] அரிய

[2] பாவி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு