13 April 2023

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்

            கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன்

            உந்தனின் பலனை உந்தனின் கரத்தில்

            நன்றி நிறைந்த இதயத்தோடு (2)

                        இன்று அர்ப்பணம் செய்கின்றோம்

                        ஏற்றுக்கொண்டருளும் பிதாவே

 

1.         தாயின் வயிற்றில் உருவாகும்

            முன்னே - முன்னறிந்தவர் நீரே

            பிரமிக்கத்தக்க அதிசயமாய்

            என்னை உருவாக்கி மகிழ்ந்தீரே

                        கண்மனி போல காத்துக்கொண்டீரே

                        கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே

 

2.         பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு

            நீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே...

            அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்

            என்று உரைத்தீரே...

                        இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும்

                        ஆசீர்வதித்தென்றும் அரவணையும்...

 

3.         ஞானம் வளர்த்தி கிருபை தயவால்

            என்றும் ஆசிர்வதித்திடுமே...

            விருத்தியடைந்து பெருகிட

            செய்யும் உந்தன் கிருபையாலே...

                        பெற்றோரை கனம் பண்ணி என்றும் கீழ்ப்படிந்து

                        ஒலிவமர கன்றாய் வளரச்செய்யும்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...