என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   என் நேசர் இயேசுவின் மேல் சார்ந்தே

                        துன்ப வனாந்திரத்தில் நடந்திட

                        இன்ப நல் வாழ்வடைந்தேன்

 

1.         லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா

            பாலிலும் வெண்மை தூய பிதா

            பூரண ரூப சௌந்தர்யமே

            பேர் சிறந்த இறைவா

 

2.         கன்னியர்கள் நேசிக்கும் தேவா

            கர்த்தரின் நாமம் பரிமளமே

            இயேசுவின் பின்னே ஓடி வந்தோம்

            என்னையும் இழுத்துக் கொண்டார்

 

3.         நேசக் கொடி மேல் பறந்தோங்க

            நேசர் பிரசன்னம் வந்திறங்க

            கிச்சிலி மரத்தின் கீழ் அடைந்தேன்

            கர்த்தரின் ஆறுதலே

 

4.         தென்றலே வா வாடையே எழும்பு

            தூதாயீம் நற்கனி தூயருக்கே

            வேலி அடைத்த தோட்டமிதே

            வந்திங்கு உலாவுகின்றார்

 

5.         நாட்டினிலே பூங்கனி காலம்

            காட்டுப் புறாவின் பாட்டொலிக்கும்

            கன்மலை சிகரம் என் மறைவே

            இந்நேரமே அழைத்தார்

 

6.         நித்திரையே செய்திடும் இராவில்

            நித்தம் என் ஆத்மா நல் விழிப்பே

            என் கதவருகே நின்றழைத்த

            ஏசுவை நேசிக்கின்றேன்

 

7.         நேசத் தழல் ஏசுவின் அன்பே

            நேசம் மரணம் போல் வலிதே

            வெள்ளங்கள் திரண்ட தண்ணீர்களால்

            உள்ளம் அணைந்திடாதே

 

8.         தூப ஸ்தம்பம் போலவே எழும்பி

            தேவ குமாரன் வந்திடுவார்

            அம்மினதாபின் இரதம் போல

            அன்று பறந்து செல்வேன்         

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு