17 April 2023

அலை அலையாய் ஆகா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அலை அலையாய் ஆகா

                        அகில மக்கள் ஆகா

                        இயேசு பாலனை காண வந்தார் ஆகா - 2

                        இன்பம் தழைத்து ஓங்க

                        நன்மை செழித்து ஓங்க

                        உண்மை அன்பை காண வந்தார் - 2

 

1.         தாளம் தட்டி பாடி மகிழுவோம்

            பாரில் வந்த இயேசு பாலன் வந்த நாளையே

            ஆட்டிடை மேய்ப்பர்களால் துதியின் தூதர்களால்

            பணியும் சாஸ்திரிகளால் எங்கும் ஆகா

            புகழ வந்தார் புகழ வந்தார் புகழக்கண்டார் யாவரும்

            கிறிஸ்மஸ் காட்சி நல்ல காட்சி காணலாம் ஒன்றுசேரலாம்

 

2.         கூடி வந்து பாடி மகிழுவோம் சந்தோஷமாய்

            நாடி வந்த தேவ பாலனை

            நன்மை கோடி உண்டு மகிழச் செய்தி உண்டு

            புதிய உறவுதான் இங்கும் ஆகா

            மகிழ வந்தார் மகிழ வந்தார் மகிழ மக்கள் பாரிலே

            கிறிஸ்மஸ் அன்பு நல்ல அன்பு இப்போ நாமும் செல்லலாம்

 

3.         இந்த செய்தி எங்கும் சொல்லுவோம் ஆனந்தமாய்

            வந்த செய்தி அன்பின் செய்தியை

            தாழ்மையின் பாலனை உண்மைத் தோழனை

            சொல்ல வந்தேன் எங்கும் ஆகா

            திகழ வேண்டும் திகழ வேண்டும் திகழ இயேசு போலவே

            கிறிஸ்மஸ் செய்தி நல்ல செய்தி எங்கும் நாமும் சொல்லலாம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...