19 April 2023

ஆதரவா யாரும் இல்ல எனக்கு இந்த உலகத்தில

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆதரவா யாரும் இல்ல

            எனக்கு இந்த உலகத்தில - 2

            உம்மைப் பற்றி கேள்விப்பட்டேன்

            உடனடியாய் ஓடி வந்தேன் - 2

 

                        ஏற்றுக் கொள்ளுமைய்யா

                        மன்னித்து மன்னித்து ஏற்றுக்கொள்ளுமைய்யா
                        சேர்த்துக் கொள்ளுமைய்யா

                        சபையினில் சேர்த்துக் கொள்ளுமைய்யா - 2

 

1.         தனிமையில் நானும் தள்ளப்பட்டேனே

            உறவுகளால் நான் ஒதுக்கப்பட்டேனே - 2

            சஞ்சலத்தினாலே கண்கள் இருளடைந்து போனதே

            பெலனற்ற என் சரீரம் சோர்வடைந்து போனதே - 2

            கலங்கி தவித்தேன் காப்பாற்றிடுமே

            வருந்தி அழைத்தேன் எனக்கு வழி காட்டிடுமே - 2

 

2.         பாவத்தில் மூழ்கி நான் தவித்தேனே

            பரமனே உன்னை தேடி வந்தேனே - 2

            பாவி நான் பூமியிலே மண் புழுவாய் துடிக்கிறேன்

            பரலோக வாசல் வர வாஞ்சையோடு இருக்கின்றேன் - 2

            ஒருநாள் தேவா நான் உம்மை அடைவேன்

            என் வாழ்நாள் வரையில் நான் உம்மோடிருப்பேன் - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...