இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
நான்
அன்றாடம்
இயேசுவுக்கு
தானே
துதி ஆராதனை
செய்து வருவேன்
என் ஆயுசுல்ல
காலம் மட்டும்தானே
தினம் தோத்திரங்கள்
சொல்லி வருவேன்
.
அவர்
இரக்கம் உள்ளவர்
கருணை உள்ளவர்
நீதியுள்ளவர்
நிலைத்து நிற்பவர்
உருக்கம்
உள்ளவர் உடனிருப்பவர்
உதவி
செய்பவரே - நான்
தனித்து
நிற்கையில் தழுவிகொண்டவர்
துணைக்கு
வந்தவர் தோள் கொடுத்தவர்
தூக்கிவிட்டவர்
துணிவு தந்தவர்
துயர்
துடைத்தவரே
1. எல்லாரிலுமே
பெரிய இம்மானுவேலர்
அவர் என்றென்றைக்கும்
கிருபை உள்ளவர்
இனிமையானவரே
எல்லாவற்றையும்
ஜெயித்த என் இயேசு
ராஜன்
அவர் இருளின்
தலையை நசுக்கி
நமக்கு
வெளிச்சம் தந்தவரே
இறங்கி
வந்தவர் ஏறிச்
சென்றவர்
இன்னும்
நமக்கு துணை இருப்பவரே
ஏழை மனதின்
துன்பம் கண்டு
பறிதவிப்பவரே
எனது வறுமை
துயரம் சுமைகள்
என்னை
தொடர்ந்த பிறர்
சாபம்
ஏற்றுக்கொண்டு
சிலுவையிலே ஜெயம்
எடுத்தவரே
ஈடு இணை
எதுமற்றவரே
எங்கள்
இதயங்களில் வாசம்
செய்பவரே
2. மன்னிக்கும்
தேவன் வாக்கு மாறாத
தேவன்
மனதுருக்கம்
உள்ளவர்
மகிமையுள்ளவர்
மரணம் வென்றவரே
தம்மிடத்தில்
வந்தவரை தள்ளாத
தேவன்
அவர் சாவை
வென்றவர்
தாழ்மையுள்ளவர்
தாங்கி நின்றவர்
தயங்கி
நின்றவரே
வார்த்தையானவர்
வாஞ்சையுள்ளவர்
வாடும்
மனதை தேற்றுகின்றவர்
வலது புறத்தில்
நிழலைப் போல
துணையிருப்பவரே
வலிமையுள்ளவர்
வழி கொடுப்பவர்
வல்லமைகளில்
நிறைந்திருப்பவர்
வானம் பூமி
யாவற்றையும்
ஆளுகின்றவரே
பாடு சுமந்து
வாதைப் பட்டவரே
தமது ஆடுகட்காய்
ஜீவன் விட்டவரே
3. தேடுகின்றோரைக்
காக்கும் தேவாதி
தேவன்
அவர் வேர்வை
செலுத்தி
சிறையிருப்பினை
திருப்புகின்றவரே
திக்கற்றவர்கே
இரங்கும் தேவக்குமாரன்
நாம் திகைத்து
நிற்கையில் உரிய
வழியை தெரியவைப்பவரே
ஞானமுள்ளவர்
நியாயமுள்ளவர்
நேர்மையுள்ளவர்
நீதி செய்பவர்
நல்ல தகப்பன்
நமக்கு என்றும்
நன்மை செய்பவரே
வீரமுள்ளவர்
சிறப்புமிக்கவர்
செயலில்
வல்லவர்
சேனை நாயகன்
சீக்கிரமாய்
மேகம் நடுவில்
வரவிருப்பவரே
உலகத்தையே
ஜெயித்து விட்டவரே
நம்மை உள்ளங்கையில்
வரைந்திருப்பவரே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment