04 April 2023

இயேசுவையே சுமந்து செல்லும்

இயேசுவையே சுமந்து செல்லும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          இயேசுவையே சுமந்து செல்லும்

            குட்டி குட்டி கழுதை நான்

            தேசம் எங்கும் இயேசுவின் அன்பை

            கொண்டு செல்லும் பாத்திரம் நான்

                        உள்ளத்தில் நீர்வாரும் நாதா

                        என் உள்ளத்தில் பூத்திட்ட ரோஜா

                        என்றென்றும் பாடல்கள் பாடிடுவேன்

 

1.         பாதை மாறிச் சென்ற என்னை தேடி வந்தவராம்

            பாவச் சேற்றில் வீழ்ந்த என்னை மீட்டுக் கொண்டவராம்

            பகலிலும் இரவினிலும் கண் இமையாமல் காப்பவராம்

            பக்கத்தில் நிற்பவராம் என் மேல் பரிவு கொண்டவராம்

                        இந்த நல் அன்பினை எங்கெங்கும் சொல்லிட

                        நாடு நகரெல்லாம் ஓடிடுவேன் - இயேசுவையே சுமந்து

 

2.         வானம் பூமி வாழ்த்திப் பாடும் வல்ல தேவனாம்

            வார்த்தையாலே போஷிக்கின்ற நல்ல ராஜனாம்

            மனதிலே என்றும் பரிவுடனே நிற்பவராம்

            ஏற்றுக் கொண்டவராம் நாவில் பாட்டுத் தந்தவராம்

                        இந்த நல் அன்பினை எங்கெங்கும் சொல்லிட

                        நாடு நகரெல்லாம் ஓடிடுவேன் - இயேசுவையே சுமந்து

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...