கண்ணின் மணி போல கடவுள் காக்கையில்

கண்ணின் மணி போல கடவுள் காக்கையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கண்ணின் மணி போல கடவுள் காக்கையில்

                        எனக்கு குறை எது - 2

                        அரணும் கோட்டையும் ஆனவரே - 2

                        அன்பின் தேவனாய் இருப்பவரே

 

1.         இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்

            காலடிக்கும் அது விளக்காகும் - 2

            வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும்

            எனக்கு கேடயமே - 2

            உயிருள்ள வசனம் என்றும் என்னை

            நடத்திடுமே நடத்திடுமே - கண்ணின்

 

2.         எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்

            எதுவும் என்னை அணுகாது - 2

            செல்லும் இடமெல்லாம் என்னை காக்க

            தூதரை அனுப்பிடுவார் - 2

            கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி

            தாங்கிடுவார் தாங்கிடுவார் - கண்ணின்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு