21 April 2023

அதிகாலையில் உம்மை அழைப்பேன்

பாடல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                   அதிகாலையில் உம்மை அழைப்பேன்

                        நடுப் பகலும் உம்மை நாடுவேன் - 2

                        பகலிலும் துதிப்பேன் இரவிலும் துதிப்பேன்

                        இப்பொழுதும் முப்பொழுதும் உம்மை துதிப்பேன் - 2

 

1.         தானிய உணவுண்டு பொழிவோடு இருந்த

            தானியேலைப் போல ஜெபிப்பேன் - 2

            தாகத்தோடும் முழு மனதோடும்

            தப்பாது உம்மைத் துதிப்பேன் - 2

 

2.         அன்னாளைப் போல ஆலயத்தில் அழுது

            கண்ணீர் சிந்தி ஜெபிப்பேன் - 2

            பொறுத்தனையோடு வருத்தமின்றி

            உறுதியாய் உம்மைத் துதிப்பேன் - 2

 

3.         தாவீது போல நடனமாடி

            தாளத்தோடுப் பாடி ஜெபிப்பேன் - 2

            பண்ணோடு நல் இசை இசைத்து

            பரனே உம்மைத் துதிப்பேன் - 2

 

 

- Dr. Mrs. Chellathai Ponnudurai

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...