கொடுங் கொல்கொதாவின் கொடு முடியில்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
1. கொடுங் கொல்கொதாவின்
கொடு முடியில்
கடுங்
காயப்பட்ட நேசரைக் கண்டேன்
அகபாரத்தால்
நான் பணிந்து நின்றேன்
மகனே இது
உனக்காய் என்றார்
ஆஹா
இன்பம் இன்பம்
இனி என்றும்
துன்பமில்லை
எந்தன்
மகா இன்பராம்
என் இயேசுவரும்
நாளதினிலே
2. இனி நான்
என்ன செய்ய என்றேன்
கனி தா
என்று கனிவாய்
சொன்னார்
இனி தாமதமோ நாதா
என்றேன்
தொனி கேட்கும்
காலம் சமீபம்
என்றார் - ஆஹா
3. அங்கி வெள்ளையாக
நிற்கும் ஜனம்
தங்கி தாபரிக்கும்
காட்சி கண்டேன்
இந்த சேனையெல்லாம்
எங்கிருந்ததென்றேன்
வந்த உபத்திரவத்தில்
நிலைத்தோர்
என்றார் - ஆஹா
4. துதி பாடும்
தூதர் கணம்
துயர் நீங்கும்
பின் மறு கணம்
துங்கன்
இயேசுவின் தூய
பிரசன்னம்
தங்க மாளிகையில்
எங்கும் ஜொலிக்கும்
5. நல் நேசருக்காய்
கொடி பிடிப்பேன்
கல்வாரி
அன்பை விளம்பிடுவேன்
நொடி நேரத்தில்
என்னை சந்திப்பார்
முடி சூடி
என்றும் ஆளுகை
செய்வேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment