11 April 2023

கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான்

                        காக்கும் தேவன் என்றாரே - கலங்கிடாதே

 

1.         மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்

            மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்

            மலைகள் விலகி அகன்று போனாலும்

            மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே

 

                        அலைகள் மோதி படகு அசைந்தால்

                        அமைதி தரவே வந்திடுவேன்

                        அமைதி தரவே வந்திடுவேன்

 

2.         கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்

            கண்ணீர் உந்தன் உணவானாலும்

            கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்

            கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே

 

                        அலைகள் மோதி படகு அசைந்தால்

                        அமைதி தரவே வந்திடுவேன்

                        அமைதி தரவே வந்திடுவேன்

 

3.         உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்

            உனக்காகவே மனம் உருகியே நின்றேன்

            உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்

            உனக்காக யாவையும் செய்து முடித்தேன்

 

                        அலைகள் மோதி படகு அசைந்தால்

                        அமைதி தரவே வந்திடுவேன்

                        அமைதி தரவே வந்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...