பனித் தூவும் இரவில்

பனித் தூவும் இரவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          பனித் தூவும் இரவில்

            நடுங்கும் பனிப் பொழிவில்

            பிறந்த என் இறைமகனே - 2

            இறை வாக்கு முடிக்க

            எமக்காக உலகில்

            கண் மலர்ந்த அதிசயமே - 2

 

                        கண்ணின் மணியே கண்ணுறங்கு

                        ஆராரிரோ - 2

 

1.         ஆட்டின் குடிலில் ஆனந்தமாக

            குழந்தையாய் தவழ்கின்ற இறையரசே - 2

            உலகத்தின் பாவங்கள் போக்கிடவே

            பாலனாய் பிறந்தாயோ - 2

            செல்வம் பெருக்க எந்தன் செல்வமே

            தாலேலோ

 

2.         அன்பே அருளே இருளின் ஒளியே

            எளியோருக்கு வாழ்விட பிறந்தாயோ - 2

            வான் தூதர் சேனைகள் உம்மை போற்ற

            விந்தையாய் உதித்தாயோ - 2

            காலம் வகுத்த கருணை கோவே நீ

            ஆராரிரோ

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு