நினைந்து நினைந்து கண்ணீர் சொரிந்து
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
192. இராகம்:
பியாகு ரூபகதாளம்
பல்லவி
நினைந்து
நினைந்து
கண்ணீர் சொரிந்து
மனதுமே
கசிந்தான்-பேதுரு;
கனிவதா
யுணர்ந்தான்.
சரணங்கள்
1. சாகும்பொழுது
நானும் உம்முடன்
சாவேனென்றேனே!
துட்ட
சாகசரோடு
கூடி யவரை
மோசஞ்
செய்தே னென்று
- நினை
2. அறியேனென்று
நான் மறுதலித்து
ஆணையு
மிட்டேனே!-ஜீவ
அறிவு உம்மிலுண்டென்று
யான் சொல்லியும்
எதிரியானே
னென்று - நினை
3. கண்ணாலே
என்னை யுற்றுப்
பார்க்கவும்
கலங்குதே
மனது-நீர்
சொன்ன சொற்படி
கூவுதே சேவல்
என்ன செய்வே னென்று - நினை
4. என்தன்
துணிவால் உம்மை
மறுத்து
ஏத்தினேன்[1], சுவாமி!-இப்போ
சிந்தனை
கொண்டு சேவடி
வந்தேன்,
சேர்ப்பீர்
என்னை என்று - நினை
-
அருள்திரு. ச. சீமோன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment