ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே
48. 'There's
a royal banner given for display' (675)
1. ஜெய ராஜ கொடி
ஏற்றிக்காட்டியே
யுத்தஞ் செய்யச் செல்லுவோம்;
வெற்றிமாலை சூடி ஜெயம்பெறவே
பூரிப்போடு பாடுவோம்
பல்லவி
செல்லுவோம், வெல்லுவோம்
நல் மீட்பர் நாமம் மூலமாய்.
வெற்றி சிறப்பார், ஆளுவார்
பூமி எங்கும் ஜோதியாய்.
2. எதிர்சேனை சீறிப் பாய்ந்து வரினும்
ராஜகொடி காட்டுவோம்;
திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்
வெற்றி வேந்தராகுவோம்.
3. எந்தச் தேச ஜாதி பாஷைக்காரரும்
சுவிசேஷங் கேட்பதால்,
யேசுநாதர் மாண்பாய் ஆளும் காலமும்
மா சமீபமானதால்.
4. அந்த நல்ல காலம் வந்தவுடன்
ராஜரீகம் பண்ணுவார்;
அவபக்தி யாவும் ஒழிந்திடவே
நீதிமுறை நாட்டுவார்.
Comments
Post a Comment